ADDED : பிப் 12, 2026 06:05 AM
சென்னை: மஹா சிவராத்திரியை ஒட்டி, சென்னையில் இருந்து 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கத்தில் இருந்து பல இடங்களுக்கு, இன்று 125; நாளை 500; 14ம் தேதி 505 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், கோயம்பேடில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் 105 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதுதவிர, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து, பல்வேறு இடங்களுக்கும், 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணியர் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பயணியர் www.tnstc.in மற்றும் அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
