/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.4.50 கோடி கொள்ளை கும்பலிடமிருந்து 123 சவரன் நகைகள், ரூ.13 லட்சம் மீட்பு
/
ரூ.4.50 கோடி கொள்ளை கும்பலிடமிருந்து 123 சவரன் நகைகள், ரூ.13 லட்சம் மீட்பு
ரூ.4.50 கோடி கொள்ளை கும்பலிடமிருந்து 123 சவரன் நகைகள், ரூ.13 லட்சம் மீட்பு
ரூ.4.50 கோடி கொள்ளை கும்பலிடமிருந்து 123 சவரன் நகைகள், ரூ.13 லட்சம் மீட்பு
ADDED : அக் 31, 2025 01:43 AM
காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அருகே, ஆட்களை கடத்தி, 4.50 கோடி ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் இருந்து, 123 சவரன் நகை மற்றும் 13 லட்சம் ரூபாயை, கேரளாவில் இருந்து போலீசார் மீட்டனர்.
மும்பை அருகே உள்ள மேற்கு போரிவலியை சேர்ந்தவர் ஜாடின், 56. 2017ம் ஆண்டு முதல் தன் சகோதரருடன், கூரியர் சேவை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த கூரியர் நிறுவனம் மூலம், பணம், நகை ஆகிய பொருட்களை, கமிஷன் அடிப்படையில் நாடு முழுதும் அனுப்பி வருகிறார்.
கடந்த ஆக., 20ல், 'ஹுண்டாய் கிரட்டா' காரில், 4.50 கோடி ரூபாய் பணத்தை லாக்கர் ஒன்றில் வைத்து, பியூஸ்குமார், தேவேந்திர படேல் ஆகிய இரு ஓட்டுநர்களை, பெங்களூரில் இருந்த சென்னை சவுக்கார்பேட்டை பகுதிக்கு அனுப்பினார்.
காஞ்சிபுரம் அடுத்த ஆட்டுப்புத்துார் அருகே கார் சென்றபோது, மூன்று கார்களில் வந்த 17 பேர் கும்பல், ஹுண்டாய் காரை மடக்கி நிறுத்தியது.
அக்கும்பல் பயங்கர ஆயுதங்களுடன், பியூஸ்குமார், தேவேந்திர படேல் ஆகிய இருவரையும், அவர்களின் காரிலேயே கடத்தியது. ஆற்காடு அருகே இரு ஓட்டுநர்களையும், அவர்கள் வந்த காரையும் விட்டு விட்டு, பணத்தோடு அக்கும்பல் தப்பியது. பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி, கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ், 42, ஜெயன், 46, சுஜிலால், 36, ரிஷாத், 27, குஞ்சு முகமது, 31, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதில், கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய, 123 சவரன் நகைகளும், 13 லட்சம் ரூபாயையும் கேரளாவில் இருந்து போலீசார் மீட்டனர்.

