/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வில்லிவாக்கத்தில் 1,253 மனுக்கள்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வில்லிவாக்கத்தில் 1,253 மனுக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வில்லிவாக்கத்தில் 1,253 மனுக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வில்லிவாக்கத்தில் 1,253 மனுக்கள்
ADDED : ஜூலை 16, 2025 11:56 PM

வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தில், நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், 874 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் உட்பட, மொத்தம் 1,253 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், 34 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நடந்து வருகிறது. அந்த வகையில், இரண்டாம் நாளான நேற்று, அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில், வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், முகாம் நடந்தது.
முகாமில், மொத்தம் 15க்கும் மேற்பட்ட கவுன்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முகாம் துவங்குவதற்கு முன், பெண்கள் அதிக அளவில் குவிந்து, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டினர்.
ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வீட்டு வசதி வாரியம், வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்தொகை என, 14 பிரிவுகளில் துறைவாரியாக மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், மொத்த சேவைக்காக, 1,253 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், அதிகப்படியாக, 873 விண்ணப்பங்கள் மகளிர் உரிமை தொகைக்காக பெறப்பட்டவை.
முகாமில், மின் வாரியம் தொடர்பான பெயர் மாற்றம், தொழில் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வருவாய்த்துறை சான்றிதழ்கள் உள்ளிட்ட, 34 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள, 1,219 மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.