/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை ஆக்கிரமித்த 13 வீடுகள் ஈச்சம்பாக்கத்தில் அதிரடி அகற்றம்
/
சாலையை ஆக்கிரமித்த 13 வீடுகள் ஈச்சம்பாக்கத்தில் அதிரடி அகற்றம்
சாலையை ஆக்கிரமித்த 13 வீடுகள் ஈச்சம்பாக்கத்தில் அதிரடி அகற்றம்
சாலையை ஆக்கிரமித்த 13 வீடுகள் ஈச்சம்பாக்கத்தில் அதிரடி அகற்றம்
ADDED : மே 15, 2025 12:10 AM
சென்னை:ஈஞ்சம்பாக்கம் ராஜன் நகர், அனுமான் காலனி சாலை, 40 அடி அகலம் கொண்டது. இந்த சாலையை, 28 அடி வரை ஆக்கிரமித்து, 13 வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய, பொன் தங்கவேல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை மீட்டெடுக்கும்படி, மாநகராட்சிக்கு, 2023 செப்டம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ஆர்வம் காட்டாதது, ஆக்கிரமிப்பாளர்கள் தலையீடு ஆகியவற்றால், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இதையடுத்து, 2024 மே 3ல், சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார இணை கமிஷனரிடம், பொன் தங்கவேல் புகார் அளித்தார்.
மூன்று நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற, இணை கமிஷனர், சிறப்பு தாசில்தார் சரோஜாவுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், 5ம் தேதி பொன் தங்கவேலை, வீட்டுக்கு அழைத்த தாசில்தார் சரோஜா, ஆக்கிரமிப்பை அகற்ற லஞ்சம் கேட்டுள்ளார்.
முதற்கட்டமாக, மூன்று லட்சம் ரூபாய் தந்தால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குவேன் என, சரோஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், பொன் தங்கவேல் புகார் அளித்தார். வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில், மூன்று லட்ச ரூபாய் வாங்கும்போது, போலீசாரிடம் சரோஜா சிக்கினார். உடந்தையாக இருந்த, போலீசாக பணிபுரியும் அவரது கணவர் பிரவீன், மற்றொரு போலீஸ்காரர் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், 13 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து தள்ளி, சாலையை மீட்டனர்.
***