sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ்களால் கடந்த ஆண்டில் 1,306 விபத்து; 78 பேர் பலி

/

பஸ்களால் கடந்த ஆண்டில் 1,306 விபத்து; 78 பேர் பலி

பஸ்களால் கடந்த ஆண்டில் 1,306 விபத்து; 78 பேர் பலி

பஸ்களால் கடந்த ஆண்டில் 1,306 விபத்து; 78 பேர் பலி


ADDED : ஜன 31, 2025 11:55 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, :மாநகர பஸ்களால், கடந்த ஆண்டில், 1,306 விபத்துகள் நடந்துள்ளன; 78 பயணியர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, 'ஸ்டாப் கரப்ஷன்' தொழிற்சங்க பேரவை செயல் தலைவர் அன்பழகன்.

இவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சென்னை மாநகர பஸ்களால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட விபத்துக்கள், உயிரிழப்புகள், பஸ்சில் இருந்து தவறி விழுந்த பயணியர், மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார்.

இதற்கு, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின், பாதுகாப்பு மற்றும் பயிற்சி பிரிவு அளித்துள்ள பதில்:

கடந்தாண்டு ஜன., 1 முதல் டிச., 20 வரை, எம்.டி.சி.,யில் மொத்தம் 1,306 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், அதிகபட்சமாக, மத்திய பணிமனை பஸ்கள் - 94, வடபழனி - 74, அண்ணாநகர் - 72, அடையார் - 66, கிளாம்பாக்கம் - 63, தாம்பரம் - 63 விபத்துகளும் நடந்துள்ளன.

அதேபோல், குறைந்தபட்ச விபத்துகளாக, தண்டையார் பேட்டை இரண்டாம் பணிமனை - 8, ஆதம்பாக்கம் - 9 ஆக பதிவாகி உள்ளன.

மாநகர பஸ்கள், மற்ற வாகனங்கள் மீது மோதிய விபத்துகளில், 78 பேர் இறந்துள்ளனர். இதுதவிர, பஸ்களில் செல்லும்போது, தவறி விழுந்ததில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். படிகளில் பயணம் செய்த, மூன்று மாணவர்கள் இறந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பஸ்களின் இயக்க நேரம் மாறணும்

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, 'ஸ்டாப் கரப்ஷன்' தொழிற்சங்க பேரவையின் துணை செயலர் லிங்கதுரை கூறியதாவது:எம்.டி.சி.,யில், 'ரன்னிங் டைம்' எனப்படும், வழித்தடங்களில் பஸ்கள் செல்லும் நேரம், 1972ம் ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின், வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பால், நெரிசல் அதிகரித்து விட்டது. தற்போது, வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், ரன்னிங் டைம் மட்டும் மாற்றவில்லை. இதனால், நிர்வாகம் உத்தரவிட்டுள்ள நேரத்துக்குள் பஸ்களை இயக்க வேண்டும் என்ற நெருக்கடி உள்ளதால், ஓட்டுநர்கள் மன உளைச்சலுடன் பணியாற்றுகின்றனர். இது,விபத்துக்கு காரணமாகி விடுகிறது. எனவே, தற்போதுள்ள நெரிசலுக்கு ஏற்றார்போல், மாநகர பஸ்களின் நேரத்தை மாற்ற வேண்டும். உரிய பயிற்சி பெற்ற நிரந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us