ADDED : மார் 04, 2024 01:54 AM

அ நிறம் | அளவு
எண்ணுார்:எர்ணாவூர் சுற்று வட்டார பகுதியில், எண்ணுார் உதவி ஆய்வாளர் விமலநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணித்தனர்.
எர்ணாவூர், கன்னிலால் லே அவுட் என்ற கடையில், குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, விற்பனை செய்வது தெரியவந்தது. இதில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்க பெருமாள், 38, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சையத் ஹூசைன், 40, ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 8 கிலோ ஹான்ஸ், 46 கிலோ கூலிப், 70 கிலோ விமல் பாக்கு, 11 கிலோ ரெமோ பாக்கு உட்பட, 135 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
