/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.37 கோடியில் புனரமைத்த மெரினா நீச்சல் குளம் திறப்பு
/
ரூ.1.37 கோடியில் புனரமைத்த மெரினா நீச்சல் குளம் திறப்பு
ரூ.1.37 கோடியில் புனரமைத்த மெரினா நீச்சல் குளம் திறப்பு
ரூ.1.37 கோடியில் புனரமைத்த மெரினா நீச்சல் குளம் திறப்பு
ADDED : அக் 09, 2024 12:19 AM

சென்னை, மெரினா நீச்சல் குளம், அ.தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில், தனியார் பராமரிப்பில் விடப்பட்டது. ஒப்பந்த காலம் முடிந்த சில நாட்களிலேயே, மற்றொரு ஒப்பந்ததாரருக்கு, டெண்டர் விடும் பணி நடந்தது.
வெளிப்படையாக, 'இ-டெண்டர்' முறையில் டெண்டர் விடப்படாததை சுட்டிக்காட்டி, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, 'நீச்சல் குள பராமரிப்பு தனியார் நிறுவனத்திடம் விடப்படாது' என, மாநகராட்சி அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சியே, 1.37 கோடி ரூபாய் செலவில், நீச்சல் குளத்தை புனரமைத்துள்ளது.
புனரமைக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். மேலும், க்யூ.ஆர்.,கோடு வாயிலாக கட்டணம் செலுத்தும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கட்டணம் செலுத்துபவர்களுக்கு, 5 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
பராமரிப்பு பணிக்காக, வாரம்தோறும் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.