/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கோகைன்' விற்ற நைஜீரியருக்கு 14 நாள் காவல்
/
'கோகைன்' விற்ற நைஜீரியருக்கு 14 நாள் காவல்
ADDED : பிப் 01, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், சென்னையில் பல்வேறு பகுதிகளில், கோகைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அஜாகுசினேடு ஓனாச்சி, 47, அவரது மனைவி லியோனி, 50, மற்றும் அமே சீயோன் இனலெக்வு, 40, உள்ளிட்டோரை அமைந்தகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து, 1.250 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. அஜாகுசினேடு ஓனாச்சியை, உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, 14 நாட்கள் காவலில் போலீசார் நேற்று முன்தினம் இரவு எடுத்தனர்.