/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
14 கிலோ கஞ்சா சென்ட்ரலில் பறிமுதல்
/
14 கிலோ கஞ்சா சென்ட்ரலில் பறிமுதல்
ADDED : செப் 21, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, செப். 21-
சென்னை சென்ட்ரல்ரயில் நிலையத்தின் 11வது நடைமேடைக்கு, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில், நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது.
அதில் இருந்து இறங்கிய பயணியரிடம் ரயில்வே போலீசார், வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அந்த நடைமேடையில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது. போலீசார் அதை திறந்து பார்த்தபோது, 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
இதன் மதிப்பு 2.80 லட்சம் ரூபாய். தப்பி சென்ற நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.