/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணம் வைத்து சூதாடிய 14 பேர் சிக்கினர்
/
பணம் வைத்து சூதாடிய 14 பேர் சிக்கினர்
ADDED : ஜன 29, 2024 01:33 AM
சென்னை:நொளம்பூர், யானைக்கவுனி பகுதியில், பணம் வைத்து சூதாடிய எட்டு பெண்கள் உட்பட, 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, நொளம்பூர் அம்பேத்கர் நகர் அருகே, விளையாட்டு மைதானத்தில் மர்ம நபர்கள், பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அந்த இடத்திற்குச் சென்று, சூதாடிய முகப்பேர் மேற்கு கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில், 29, உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, யானைக்கவுனி சிங்கர் தெரு நடைபாதையில், பணம் வைத்து சூதாடிய, அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்வரி, 42, பாரிமுனை நிவேதா, 23, உட்பட எட்டு பெண்கள் கைதாகினர். இரண்டு இடங்களிலும் சேர்த்து, 14 பேரை கைது செய்து, இவர்களிடம் இருந்து, 22,000 ரூபாய் மற்றும் சீட்டுக் கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.