/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.12 கோடி நிலம் மோசடி இருவருக்கு 15 மாதம் கடுங்காவல்
/
ரூ.12 கோடி நிலம் மோசடி இருவருக்கு 15 மாதம் கடுங்காவல்
ரூ.12 கோடி நிலம் மோசடி இருவருக்கு 15 மாதம் கடுங்காவல்
ரூ.12 கோடி நிலம் மோசடி இருவருக்கு 15 மாதம் கடுங்காவல்
ADDED : பிப் 22, 2024 12:47 AM
பூந்தமல்லி, அண்ணா நகர் கிழக்கு, ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 68. திருநெல்வேலியில் இவருக்கு, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள குடும்ப சொத்து இருந்தது.
அந்த நிலத்தை, 2010ல், திருநெல்வேலி மாவட்டம், தனக்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரவி, 44, மற்றும் சாமி, 52, ஆகிய இருவரும், லண்டனில் உள்ள ஜெகநாதனின் மகன் சிவாகாந்த் போல் ஆள்மாறாட்டம் செய்து, அம்பத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொண்டனர்.
இது குறித்த புகாரை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், 2010ல் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், ரவி மற்றும் சாமி இருவருக்கும், 15 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஸ்டாலின் நேற்று தீர்ப்பு வழங்கினார்.