/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் வாரிய ஊழியர் போல் நடித்து 15 சவரன் நகை திருட்டு
/
மின் வாரிய ஊழியர் போல் நடித்து 15 சவரன் நகை திருட்டு
மின் வாரிய ஊழியர் போல் நடித்து 15 சவரன் நகை திருட்டு
மின் வாரிய ஊழியர் போல் நடித்து 15 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 16, 2025 12:40 AM
சென்னை, ஐஸ்ஹவுசில், மின் பயன்பாடு கணக்கீடு செய்வது போல நடித்து, 15 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐஸ்ஹவுஸ், டாக்டர் பெசன்ட் சாலையில், காவலர் குடியிருப்பு அருகே வசித்து வருபவர், ஜெயம், 80. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில், மூத்தமகள் அமெரிக்காவிலும், இளையமகள் பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். இவர், இங்கு தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு, மின்வாரிய ஊழியர் எனக்கூறிக் கொண்டு ஒருவர் வந்துள்ளார். மின் பயன்பாட்டை கணக்கெடுப்பது போல் நடித்து, பீரோவில் இருந்து, 15 சவரன் நகையை திருடிச் சென்று விட்டார்.
ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில், மூதாட்டி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.