ADDED : ஜூன் 02, 2026 05:41 AM

அ நிறம் | அளவு
ஆவடி: ஆவடியில், பொதுமக்களுக்கு இடையூறாக, விதிமீறி சாலைகளில் வைக்கப்பட்ட 150 பேனர்கள், அதிகாரிகளால் அகற்றப்பட்டன.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அனுமதியின்றி சாலைகளில் பேனர்கள் வைக்கின்றனர். இதனால், கவனச்சிதறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆவடி சி.டி.எச்., சாலை, பட்டாபிராம், திருமுல்லைவாயில், புதிய ராணுவ சாலை, கோவில் பதாகை உள்ளிட்ட பகுதிகளில், விதிமீறி வைக்கப்பட்ட 150 பேனர்களை, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், கடந்த இரு நாட்களில் அகற்றியுள்ளனர்.
