தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/15,500 வீடுகள் தேக்கம் விற்பனையை அதிகரிக்க திட்டம்

15,500 வீடுகள் தேக்கம் விற்பனையை அதிகரிக்க திட்டம்

15,500 வீடுகள் தேக்கம் விற்பனையை அதிகரிக்க திட்டம்


ADDED : பிப் 08, 2024 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 15,536 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளதாக, ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுதும் ரியல் எஸ்டேட் துறை வர்த்தகம் அதிகரித்து வந்தாலும், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில், இதன் வேகம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளை கடந்து, ரியல் எஸ்டேட் துறை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. அதேநேரம், புதிய திட்டங்கள் வருகையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், ஏற்கனவே உள்ள திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள் விற்பனைக்கு, அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகள் வருகின்றன.

தேசிய அளவில், கடந்த 2023ல் ஜூலை - டிசம்பர் காலத்தில் வீடு, அலுவலக இடங்கள் விற்பனை குறித்த சந்தை நிலவர கணக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வு நிறுவனமான,'நைட் பிராங்க்' இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த 2023ல், 16,272 வீடுகள் அடங்கிய புதிய திட்டங்கள் அறிமுகமாகின. இதே காலத்தில், 14,920 வீடுகள் விற்பனையாகின.

பழைய திட்டங்களில் நிலுவையையும் சேர்த்து பார்க்கும் போது தற்போது 15,536 வீடுகள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. அதிக விலை வீடுகள் எண்ணிக்கை இதில் மிக குறைவாகவே உள்ளன.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் கூறியதாவது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிதாக வீடு வாங்க, மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த 2023ல் இரண்டாம் காலாண்டில், ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திட்டங்களில் விற்காமல் இருந்த வீடுகள் எண்ணிக்கை, 7,938 ஆக இருந்தது. இது, மூன்றாம் காலாண்டில், 7,833 ஆக குறைந்துள்ளது. இதை மேலும் குறைப்பற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

- நமது நிருபர் -

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us