/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வேல்ஸ்' பல்கலை 15வது பட்டமளிப்பு விழா
/
'வேல்ஸ்' பல்கலை 15வது பட்டமளிப்பு விழா
ADDED : டிச 03, 2024 12:39 AM

சென்னை, வேல்ஸ் பல்கலையின் 15வது பட்டமளிப்பு விழா, பல்லாவரத்தில் உள்ள பல்கலை வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
சிறப்பு விருந்தினராக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார். அவருக்கு, நினைவுப்பரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.விழாவில், 4,500 மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பேட்மின்டன் வீராங்கனையர் சாய்னா நேவால், பி.வி.சிந்து மற்றும் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில், சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:
தமிழகத்தில் மரியாதைக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வேல்ஸ் பல்கலையை வடிவமைப்பதில், கணேஷின் பங்கு அளப்பரியது.
எனக்கு முன்னால் தன்னம்பிக்கையுடன் அமர்ந்துள்ள பட்டதாரிகளை பார்க்கும்போது, எதிர்கால தலைவர்களை பார்ப்பது போல் உணர்கிறேன்.
நீங்கள், வளர்ச்சியடைந்த இந்தியாவின் துாண்கள். நம் தேசத்தை 21ம் நுாற்றாண்டிற்கு வழி நடத்தும் பொறுப்பு உங்களிடம் உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் வழியை பின்பற்றி, நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், இணை வேந்தர்கள் டாக்டர் ஜோதி முருகன், ஆர்த்தி கணேஷ், துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.