ADDED : ஜன 02, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், ஸ்டெல்லஸ் அவென்யூ-2வை சேர்ந்தவர் விக்னேஷ், 37; தனியார் நிறுவன மேலாளர்.
குடும்பத்தினருடன் டிச., 29ல் திருப்பதிக்கு சென்றார். அங்கிருந்து, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
படுக்கை அறையில் இருந்த மர பீரோவை உடைத்து, அதிலிருந்த செயின், நெக்லஸ், வளையல், மோதிரம், கம்மல் என, 16 சவரன் தங்க நகைகள், குத்துவிளக்கு, வெள்ளி தட்டு, வெள்ளி விநாயகர் சிலை ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.