ADDED : பிப் 23, 2024 12:26 AM

சேத்துப்பட்டு, சேத்துப்பட்டில் இயங்கும், எம்.சி.சி., பள்ளியும், சேலம் விங்ஸ் ஆப் சயின்ஸ் அகடாமியும் இணைந்து, மாணவர்களுக்கான ராக்கெட் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை நடத்தின.
பின், நேற்று 36 மாணவியர் உட்பட 160 மாணவர்கள், அகாடமியின் பயிற்சியாளர்கள் உதவியுடன், சிறிய வகையான 15 ராக்கெட்கள் மாதிரிகளை உருவாக்கினர். அகடாமி நிபுணர்களும் ஒரு ராக்கெட் உருவாக்கினர்.
அவற்றை நேற்று பள்ளி வளாகத்தில், மாணவர்கள் குழுவினர் விண்ணில் செலுத்தினர்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மனோகர், அகாடமியின் நிறுவனர் அரவிந்த், இயற்பியல் ஆசிரியர் ஜெயதாஸ் தினகரன் உள்ளிட்டோர் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
இதுகுறித்து, பள்ளியின் ஆசிரியர்கள் கூறியதாவது :
மாணவர்களுக்கு, ராக்கெட் தொழில்நுட்பம் அறிந்துக் கொள்ளும் வகையில், இவ்வகை பயிற்சி வழங்கப்பட்டது.
இதில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 15 ராக்கெட்களுக்கு, ஒரு குழுவில் 11 பேர் வீதம், 15 குழுவினர், 15 ராக்கெட்களை உருவாக்கினர். ராக்கெட்டிற்கு பயன்படுத்தப்படும் திட எரிபொருள், இதிலும் பயன்படுத்தப்பட்டது. 100 முதல் 200 அடி துாரம் ராக்கெட்கள் பயணித்து, 'பாராசூட்' வாயிலாக மீண்டும் பள்ளி வளாகத்திற்கே திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.