/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி பூங்காவுக்கு 16,000 பேர் வருகை
/
கிண்டி பூங்காவுக்கு 16,000 பேர் வருகை
ADDED : ஜன 17, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வண்டலுார் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்களில், காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்திருந்தது.
வண்டலுாரில் கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் 30,000 பார்வையாளர்கள் வந்திருந்தனர். காணும் பொங்கலன்று 30,000த்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் 23,000 பார்வையாளர்கள் மட்டுமே வந்தனர். அதேநேரம், கிண்டி பூங்காவில் புது மைல்கல்லாக ஒரே நாளில் 16,000 பேர் குவிந்தனர்.