ADDED : நவ 29, 2025 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட் பட்ட பிரதான சாலையில், மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.
இப்பிரச்னை பூதாகரமானதை அடுத்து, மாநகராட்சி ஊழியர்கள், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை சிறைபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சி.டி.எச்., சாலை, பட்டாபிராம், நியூ மிலிட்டரி சாலை, பூந்தமல் லி நெடுஞ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 17 மாடுகளை, நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து, கோ சாலைக்கு கொண்டு சென்றனர்.

