/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
178வது வார்டு குடிநீர் வாரிய ஆபீஸ் இடமாற்றம்
/
178வது வார்டு குடிநீர் வாரிய ஆபீஸ் இடமாற்றம்
ADDED : மார் 05, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு,
அடையாறு மண்டலம், 178வது வார்டு குடிநீர் வாரிய அலுவலகம், இந்திரா நகர் இரண்டாவது அவென்யூவில் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால், 6ம் தேதி முதல், 178வது வார்டு, குடிநீர் வாரிய அலுவலகம், 'பீலியம்மன் கோவில் தெரு, தரமணி, சென்னை- 113' என்ற முகவரியில் செயல்படும்.
குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணம் மற்றும் புகார் குறித்து, இந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

