/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சியில் 179 அலுவலர்கள் நியமனம்
/
மாநகராட்சியில் 179 அலுவலர்கள் நியமனம்
ADDED : ஆக 07, 2025 12:26 AM
சென்னை நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், நேற்று, தமிழகம் முழுதும், 2,538 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பணியாணை வழங்கினார்.
இதில், சென்னை மாநகராட்சியில், 113 சுகாதார ஆய்வாளர்கள், 54 உதவி பொறியாளர்கள், 12 வரைவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணிகள், செயல்பாடுகள் குறித்த அறிமுக கூட்டம், நேற்று, மேயர் பிரியா தலைமையில் நடந்தது. சென்னை குடிநீர் வாரியத்தில், 200 உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, பணி தொடர்பான 15 நாட்கள் பயிற்சி, கீழ்ப்பாக்கம் குடிநீர் வாரிய பயிற்சி மையத்தில் வழங்கப்பட உள்ளது. ஓய்வு பெற்ற குடிநீர் வாரிய அதிகாரிகள் பயிற்சி வழங்குவர் என, அதிகாரிகள் கூறினர்.