/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளப்பில் சூதாடிய 18 பேர் பிடிபட்டனர்
/
கிளப்பில் சூதாடிய 18 பேர் பிடிபட்டனர்
ADDED : டிச 03, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்,
அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, சம்பந்தபட்ட கிளப்பை கண்காணித்த போது, சிலர் சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, பணம் வைத்து சூதாடிய, புரசைவாக்கத்தை சேர்ந்த கிளப் உரிமையாளர் தினேஷ்குமார், 41, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரகுமார், 65, பிரபாகரன், 54, பிரகாஷ், 33, உட்பட, 18 பேரை கைது செய்தனர்.