sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு 18 வகை ஊனுண்ணி பறவைகள் வருகை

/

 பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு 18 வகை ஊனுண்ணி பறவைகள் வருகை

 பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு 18 வகை ஊனுண்ணி பறவைகள் வருகை

 பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு 18 வகை ஊனுண்ணி பறவைகள் வருகை


UPDATED : ஜன 18, 2026 05:33 AM

ADDED : ஜன 18, 2026 05:26 AM

Google News

UPDATED : ஜன 18, 2026 05:33 AM ADDED : ஜன 18, 2026 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வாத்துகள், உள்ளான் வகை பறவைகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இவற்றை வேட்டையாடும் ஊனுண்ணி பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதுவரை 202 பறவைகளின் வருகை ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 18 வகையான ஊனுண்ணி பறவைகள், பள்ளிக்கரணைக்கு அடிக்கடி வந்து செல்வது ஆதாரங்களுடன் பதிவு செய்யப் பட்டுள்ளது.



வனத்துறையுடன் இணைந்து, பறவைகள் கணக்கெடுப்பை மேற்கொண்ட, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:

பொதுவாக பறவைகள், தானியங்கள், சிறு புழு, பூச்சிகளை உணவாக கொள்ளும். ஆனால், குறிப்பிட்ட சில வகை பறவைகள், இறந்த விலங்குகளின் இறைச்சி, பூச்சிகள், சிறு விலங்குகள், சிறிய ரக பறவைகளை வேட்டையாடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இத்தகைய பறவைகளை ஊனுண்ணிகள் என, ஆராய்ச்சியாளர்கள் வகைபடுத்து கின்றனர்.

அந்த வகையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், உள்நாடு, வெளிநாட்டு ஊனுண்ணி பறவைகள் வந்துள்ளன.

இயற்கை அடிப்படையிலான உணவு சங்கிலி தொடர்ச்சி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நிலவுகிறது என்பதை ஊனுண்ணி பறவைகளின் வருகை உறுதி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊனுண்ணி பறவைகளின் வாழ்விடம், இரை விபரம்




உள்நாட்டு ஊனுண்ணி பறவைகள்: வல்லுாறு, சிறிய கரும்பருந்து, சிவப்பு பருந்து, தேன் பருந்து, வெள்ளைக்கண் வைரி, குட்டைக்கால் கழுகு, புள்ளி ஆந்தை, கூகை ஆந்தை.

வாழ்விடம்: காடுகள், விவசாய நிலங்கள், திறந்தவெளி புல்வெளிகள், அகன்ற இலை காப்பு காடுகள், புதர்காடுகள், முட்புதர்கள், பள்ளங்கள்.

இரை: கரையான், சிறிய பறவைகள், எலிகள், வெட்டுக்கிளி போன்றவை, முயல், தவளை, பல்லிகள், மீன்கள், அழுகிய இறைச்சி, தேள், சிலந்தி, தேரைகள்.



வெளிநாட்டு ஊனுண்ணிகள்: சேற்று பூனைப்பருந்து, வெண்தோழ் கழுகு, பொரி வல்லுாறு, பெரிய புள்ளி கழுகு, இந்திய புள்ளி கழுகு, விரால் அடிப்பான், வெளிறிய பூனை பருந்து, சிவப்பு வல்லுாறு, செங்கழுத்து வல்லுாறு, வெள்ளை வயிறு கடற்கழுகு.



வாழ்விடங்கள்: மேய்ச்சல் நிலங்கள், உப்பளங்கள், வயல்கள், விவசாய நிலங்கள், வறண்ட நிலங்கள், கடலோரங்கள், சதுப்பு நிலங்கள், ஏரிகள், கழிமுக பகுதிகள், கடற்கரை, தீவுகள்.

இரை: வயல் எலிகள், முயல்கள், வானம்பாடி பறவைகள், வாத்துகள், நீர்க்கோழிகள், தவளை, தேரைகள், புறாக்கள், கவுதாரிகள், எலிகள், பாம்புகள், கொக்குகள், வவ்வால்கள், ஆமைகள்.






      Dinamalar
      Follow us