/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை வீதியில் 1.80 லட்சம் நாய்கள்
/
சென்னை வீதியில் 1.80 லட்சம் நாய்கள்
ADDED : செப் 21, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவனம், சென்னை மாநகராட்சி இணைந்து தெருநாய்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டன.
அதற்கான அறிக்கையை, அந்நிறுவனத்தின் இயக்குனர் கார்லெட் ஆனி பெர்னான்டஸ், மாநகராட்சி மேயர் பிரியாவிடம் நேற்று சமர்ப்பித்தார்.
மேயர் பிரியா கூறியதாவது:
சென்னையில் தெருநாய் கணக்கெடுப்பு ஐந்தாண்டுக்கு பின் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கருத்தடை வாயிலாக, நாய்கள் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.