ADDED : மார் 14, 2024 12:31 AM
அ நிறம் | அளவு
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், விளம்பர பேனர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்கும் விதமாக ஐந்து மண்டலங்களிலும், கள ஆய்வு செய்யப்பட்டு, கட்டடங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த 37 விளம்பர பலகைகள், 148 விளம்பர பதாகைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள், நேற்று அகற்றினர்.
மாநகராட்சி நிர்வாகம் பெயருக்காகவே, விளம்பர பேனர் மற்றும் தட்டிகளை அகற்றி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
