ADDED : ஜன 20, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், நடப்பு நிதியாண்டில் இதுவரை, 1,922 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
பயணியருக்கான ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கும் ஐ.சி.எப்., ஆலையில், 2025 -- 26ம் நிதி ஆண்டில், 2,671 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுவரையில், 1,922 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள பெட்டி தயாரிப்பு பணிகள், வரும் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
