/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டி வயிற்றில் 195 கற்கள் அகற்றம்
/
மூதாட்டி வயிற்றில் 195 கற்கள் அகற்றம்
ADDED : டிச 20, 2024 12:41 AM
சென்னை, மூதாட்டியின் பித்தப்பையில் இருந்த, 195 கற்களை, 'பி வெல்' மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி, மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, புதுச்சேரி 'பி வெல்' மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்த வயிற்று வலி மற்றும் குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகளுடன், 75 வயது மூதாட்டி, புதுச்சேரி பி வெல் மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
வழக்கமாக செய்யக்கூடிய, அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, இ.ஆர்.சி.பி., முறையில் 'ஸ்டெண்ட்' பொருத்துதல் மற்றும் 'லாபரோஸ்கோப்பிக் கொலிசிஸ்டெக்டமி' வாயிலாக, பித்தப்பையில் இருந்து கற்களை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இச்சிகிச்சையை மிக நுணுக்கமாக லாபரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ராஜா, தீபக் ரவி தலைமையில், டாக்டர் விஜயா பாலகண்டன், ராம்குமார் அடங்கி குழுவினர் மேற்கொண்டனர். பித்தப்பையில் இருந்து, 195 கற்களை வெற்றிகரமாக அகற்றினர். இந்த துல்லியமான சிகிச்சை முடிந்த, ஆறு மணி நேரத்தில் நோயாளி வீடு திரும்பினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.