ADDED : ஆக 12, 2026 09:32 PM
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை மற்றும் படப்பை பகுதிகளில், 1,958 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேளச்சேரி பிரதான சாலை –- ரேடியல் சாலை சந்திப்பு அருகே, நேற்று காலை 8:00 மணியளவில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற, ‘பொலிரோ மேக்சி டிரக்’ மற்றும் ஒரு ஆட்டோவை சோதனையிட்டனர்.
அதில், அரசால் தடை செய்யப்பட்ட 1,605 கிலோ ‘குட்கா’ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ராமநாதன், 37, நந்தகுமார், 38, சுபம், 18, ஆகியோரை கைது செய்தனர்.
* அதேபோல, படப்பை காவல் எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி, கலைஞர் நகர் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் படப்பை போலீசார் சோதனை நடத்தினர். இதில், 353 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜெயபிரகாஷ், 32, என்பவர் கைது செய்யப்பட்டார்.
