/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி ஓட்டுனரை தாக்கி கை வரிசை 2 பேர் கைது
/
லாரி ஓட்டுனரை தாக்கி கை வரிசை 2 பேர் கைது
ADDED : நவ 26, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரைச் சேர்ந்தவர் கணேசன், 30; லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, ராயப்பேட்டை திரு.வி.க.,சாலையில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு மர்ம நபர்கள் வீண் தகராறு செய்து, காலி பீர்பாட்டிலால் தாக்கி, மொபைல் போன் மற்றும் வெள்ளிச் செயினை பறித்துச் சென்றனர்.
அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்திய பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்த விஜய்பிரபு, 24, ஆயிரம்விளக்கு ரங்கூன் தெருவைச் சேர்ந்த வினோத், 26 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, மொபைல் போன் மற்றும் வெள்ளி செயினை பறிமுதல் செய்தனர்.

