/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
த.வெ.க., நிர்வாகியை தாக்கிய 2 பேர் கைது
/
த.வெ.க., நிர்வாகியை தாக்கிய 2 பேர் கைது
ADDED : ஆக 07, 2025 12:37 AM
கிண்டி: கிண்டி, நாகிரெட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 38; த.வெ.க., கட்சியின், 168வது வார்டு நிர்வாகி.
மூன்று மாதத்திற்குமுன், இவர் முன்னிலையில் கட்சி பேனர் வைத்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஷியாம், 23, ஸ்டீபன், 22, ஆகியோர், ஸ்ரீராமிடம் தகராறு செய்து தாக்கினர். தட்டிக்கேட்ட, ஸ்ரீராமின் சகோதரர் ஜானகிராமனை பிளேடால் முகம், முதுகு, வயிறு பகுதியில் கிழித்தனர். இதில், இருவரும் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிண்டி போலீசார், நேற்று மாலை ஷியாம், ஸ்டீபன் ஆகியோரை கைது செய்தனர். சந்தோஷை தேடி வருகின்றனர்.