/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
/
21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ADDED : செப் 03, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம்: செங்குன்றம், மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த ஓட்டேரியைச் சேர்ந்த அழகர்சாமி, 27, அம்பத்துார், ஐ.சி.எப்., காலனியைச் சேர்ந்த பாரதி, 25, ஆகியோரை சோதனை செய்ததில் 21 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.