ADDED : ஜூலை 09, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லியில் உள்ள வெளியூர் பேருந்து நிலையத்தில், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், 23, ஹேமந்த் பாபு, 22, ஆகியோர், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் விற்றதும் தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.