UPDATED : ஆக 23, 2026 07:49 PM
ADDED : ஆக 23, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
துரைப்பாக்கம்:துணை மின்நிலையம் மற்றும் மின்பகிர்மான பெட்டிகளில் இருந்து, பியூஸ் கேரியர்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
துரைப்பாக்கம் துணை மின் நிலையம் மற்றும் மின்பகிர்மான பெட்டிகளில் உள்ள, பியூஸ் கேரியர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனால், துரைப்பாக்கம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், துரைப்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கண்ணகி நகரை சேர்ந்த நாகராஜ், 28, அஜித்குமார், 23, ஆகியோர், பியூஸ் கேரியர்களை திருடி, அதில் உள்ள 50,000 ரூபாய் மதிப்புள்ள காப்பரை பிரித்து எடுத்தது தெரிந்தது. இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
