UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 10:16 PM
அ நிறம் | அளவு
அம்பத்துார்: அம்பத்துார் அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் அகில்ராம், 14. இவர், தன் நண்பர்களான, தருண் ஆகாஷ், 14 உள்ளிட்ட சிலருடன், நேற்று மாலை புழல் ஏரியில் குளிக்க சென்றார்.
அப்போது, அகில்ராம் மற்றும் தருண் ஆகாஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். பயந்து அலறிய நண்பர்கள், அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த அம்பத்துார் தொழிற்பேட்டை மற்றும் செங்குன்றம் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.
