/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
/
குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
ADDED : நவ 22, 2024 12:40 AM

திருத்தணி, --
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மகன் பிரவீன், 10, முருகேசன் மகன் கிரிநாத்,10. இருவரும் உறவினர்கள். திருத்தணியிலுள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்தனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்து, 5:00 மணியளவில் வீட்டிற்கு வந்த இவர்கள், இயற்கை உபாதை கழிக்க கன்னிகாபுரம் குளக்கரைக்கு சென்றனர்.
அங்குள்ள குட்டையில் கால் கழுவ இறங்கிய போது, இருவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்த சிறுவர்களின் பெற்றோர் அவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே சிறுவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.