ADDED : ஜூலை 07, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
சென்னை: அண்ணா நகர், கிண்டி ஆகிய பகுதிகளில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் டீக்கடை மற்றும் ஹோட்டலில், 17 வயதுடைய இரு சிறுவர்களை, பணியில் ஈடுபடுத்தியிருந்தது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரிகள், சிறுவர்களை மீட்டு, குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் உத்தரவிட்டுள்ளார்.
