/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து 2 பசு மாடுகள் பலி
/
மின்சாரம் பாய்ந்து 2 பசு மாடுகள் பலி
ADDED : அக் 19, 2025 03:43 AM
சென்னை: அமைந்தகரையில் மின்சாரம் பாய்ந்ததில், மாட்டின் உரிமையாளர்கள் கண் முன்னே, இரண்டு பசு மாடுகள் துடிதுடித்து இறந்தன.
அமைந்தகரை, பி.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர், 44, சத்யராஜ், 41. இருவரும், மாடுகளை பராமரித்து, பால் விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று இரவு 8:00 மணிக்கு, மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசு மாட்டை, இருவரும் வீட்டிற்கு ஓட்டிச் சென்றனர்.
பி.வி., கோவில் தெரு, வரசக்தி விநாயகர் கோவில் அருகே, சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் நடந்து சென்ற இரண்டு பசு மாடுகள், அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து பலியாகின.இதை பார்த்த மாட்டின் உரிமையாளர்கள் கதறி அழுதனர்.
பின், சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்தனர். சம்பவம் குறித்து, அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் மோதி விபத்து திருவள்ளூர் அடுத்த எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தில், சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை, நேற்று இரவு 8:00 மணிக்கு, நான்கு பசுக்கள் கடந்தன.
அப்போது, திருவள்ளூரில் இருந்து பள்ளிப்பட்டு நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில், நான்கு பசுக்களும் பலியாகின. கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.