ADDED : ஜன 24, 2026 06:36 AM

அ நிறம் | அளவு
சென்னை: மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே, 77வது குடியரசு தினம் வரும், 26ம் தேதி கொண்டாடப் படுகிறது.
இதில் தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
எனவே, பாதுகாப்பு கருதி சென்னையில், 25, 26ம் தேதிகளில், அரசு விழாவை தவிர, மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ்பவன் முதல் மெரினா கடற்கரை வரை, முதல்வர் இல்லம் முதல் உழைப்பாளர் சிலை வரையிலான பகுதிகள், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளன.
எனவே, ட்ரோன்கள் மட்டுமின்றி ஆளில்லா விமானங்கள் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
