ADDED : செப் 04, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ் இணைந்து, உயர்தர செயல்திறன் பயிற்சியாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாமை, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கின.
முதற்கட்டமாக, தடகளம் மற்றும் ஜூடோ பயிற்சியாளர்களுக்கு முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாமை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நிபுணர்கள், நவீன பயிற்சி முறைகள், அறிவியல் சார்ந்த அணுகுமுறைகள் மற்றும் உயர் செயல்திறன் உத்திகள் குறித்து பயிற்சி வழங்குகின்றனர்.
