/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் 'கட்'
/
5 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் 'கட்'
ADDED : ஆக 14, 2025 11:49 PM
சென்னை :ஐந்து மண்டலங்களில், 18, 19 ஆகிய தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிக்காக, குடிநீர் குழாய் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. இதனால், ராயபுரம், திரு.வி.க., நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட, புரசைவாக்கம், பெரியமேடு, சவுகார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ், திருவல்லிக்கேணி, தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில், 18, 19 ஆகிய தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து, லாரி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.
அழுத்தம் குறைவான, இணைப்பு இல்லாத பகுதிகளில், லாரி குடிநீர் வழங்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.