/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதுகாப்பு கருதி பஸ் நிறுத்தங்களில் 2 மின் விளக்கு
/
பாதுகாப்பு கருதி பஸ் நிறுத்தங்களில் 2 மின் விளக்கு
பாதுகாப்பு கருதி பஸ் நிறுத்தங்களில் 2 மின் விளக்கு
பாதுகாப்பு கருதி பஸ் நிறுத்தங்களில் 2 மின் விளக்கு
ADDED : மே 13, 2025 12:30 AM
சென்னை :சென்னை மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சாலைகள் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. இதை தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பயணியர் பாதுகாப்புக்காக, மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் இரண்டு மின் விளக்குகள் பொருத்த திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக, சாலையோரம் மின்விளக்கு வசதி உடைய, 675 பேருந்து நிறுத்தங்களில் இரண்டு மின் விளக்குகள் பொருத்தும் பணி துவங்கியது. இதுவரை, 70 பேருந்து நிறுத்தங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன. மற்ற இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், சாலையோர மின் வசதி இல்லாத 210 பேருந்து நிறுத்தங்களில், மின் மீட்டருடன் கூடிய, மின் விளக்கு அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளன என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.