/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏசி' மெக்கானிக் கொலை நண்பர்கள் 2 பேர் கைது
/
'ஏசி' மெக்கானிக் கொலை நண்பர்கள் 2 பேர் கைது
ADDED : ஜன 12, 2025 10:58 PM
நந்தம்பாக்கம்:பரங்கிமலை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் நரேஷ், 27; 'ஏசி' மெக்கானிக். நேற்று முன்தினம், வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய், நந்தம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், நண்பர்களான பரங்கிமலை, துளசிங்கபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 23, திலிப், 30, ஆகியோருட்ன சுற்றியது தெரிந்தது. நேற்று, இரண்டு பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், மூன்று பேரும், மணப்பாக்கம் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையோரம் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், இரண்டு பேரும் சேர்ந்து, அங்கு கிடந்த கயிற்றால் நரேஷின் கழுத்தை இறுக்கி, ஆற்று நீரில் மூழ்கடித்து கொலை செய்து, கரையில் போட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.