sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சாலையின் குறுக்கே வந்த பசு மாடால் விபத்து: வேன் மோதி 2 பேர் பலி; 2 பெண்கள் 'சீரியஸ்'

/

 சாலையின் குறுக்கே வந்த பசு மாடால் விபத்து: வேன் மோதி 2 பேர் பலி; 2 பெண்கள் 'சீரியஸ்'

 சாலையின் குறுக்கே வந்த பசு மாடால் விபத்து: வேன் மோதி 2 பேர் பலி; 2 பெண்கள் 'சீரியஸ்'

 சாலையின் குறுக்கே வந்த பசு மாடால் விபத்து: வேன் மோதி 2 பேர் பலி; 2 பெண்கள் 'சீரியஸ்'


ADDED : டிச 20, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை: படப்பை அருகே, சாலையின் குறுக்கே வந்த பசு மாடால், கட்டுப்பாட்டை இழந்த வேன், அடுத்தடுத்து இரண்டு ஸ்கூட்டரில் மோதியதில், ஆண்கள் இருவர் உயிரிழந்தனர்; பெண்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

குன்றத்துார் அருகே படப்பை அடுத்த ஆதனுார் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார், 24. இவர், தனியார் தொழிற்சாலையில் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் மினி வேன் ஓட்டி வருகிறார்.

இவர், ஆதனுாரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு செல்லும் சாலையில், டி.டி.சி., நகர் பகுதியில், நேற்று இரவு மினி வேன் ஓட் டி சென்றார்.

அப்போது சாலையில் திடீரென பசுமாடு ஒன்று குறுக்கே வந்தது. கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் பசுவின் மீது மோதியது.

ஆத்திரமடைந்த அப்பகு தி மக்கள் மினி வேனை துரத்தி சென்றனர். இதனால் பயந்து போன சரத்குமார், அதிவேகமாக வேனை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, எதிரே வந்த இரண்டு ஸ்கூட்டர்கள் மீது அடுத்தடுத்து மோதி னார்.

இதில், ஸ்கூட்டரை ஓட்டி வந்த ஆதனுாரைச் சேர்ந்த வெங்கடேஷ், 59, சம்பவ இடத்தில் பலியானார். இவரது மனைவி சாரதா, 50, படுகாயம் அடைந்தார். மற்றொரு ஸ்கூட்டரில் வந்த ஆதனுாரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் ராஜ்குமார், 42, சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகள் சந்தியா,25, படுகாயம் அடைந்தார்.

அப்பகுதியில் சென்றவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த இரண்டு பெண்களையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மினி வேன் ஓட்டுநர் சரத்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us