UPDATED : அக் 29, 2026 10:42 PM
ADDED : அக் 29, 2026 10:39 PM
அ நிறம் | அளவு
மீனம்பாக்கம்: தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சாமுவேல், 20, மீனம்பாக்கம் தனியார் கல்லுாரி மாணவர். அங்கிருந்து கடந்த 27ல் வெளியே வந்தபோது, உடன் படிக்கும் நங்கநல்லுார் சமாதானப்பிரபு, 22, உள்ளகரம் திவாகர், 18, உட்பட நால்வர், அவரை சரமாரியாக கட்டையால் தாக்கினர்.
மீனம்பாக்கம் போலீசார் விசாரணையில், சாமுவேல், நண்பர்களுடன் நட்பாக பேசி, பின் விலகி சென்றுள்ளார். இந்த ஆத்திரத்தில் அவர் தாக்கப்பட்டது தெரிந்தது. சமாதானப்பிரவு, திவாகரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். மற்ற இருவரை தேடுகின்றனர்.
