ADDED : ஆக 22, 2026 09:14 PM
அ நிறம் | அளவு
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜீவா நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 31.
கடந்த 20ம் தேதி இரவு, வீட்டு வாசலில் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற இருவர் அவரது மனைவியை கிண்டல் செய்தனர். இதை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த இருவரும், மதுபாட்டிலை வீட்டு வாசலில் வீசி சென்றனர். தொடர்ந்து மறுநாள் அதிகாலை, சதீஷ்குமாரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்படி, காமராஜர் நகரை சேர்ந்த தருண் என்ற மாறன், 20, திருமலை, 21, ஆகியோரை ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தருண் மீது ஏற்கனவே ஏழு வழக்குகள் உள்ளன.
