UPDATED : ஆக 06, 2026 06:53 PM
ADDED : ஆக 06, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
எண்ணுார்:எர்ணாவூர் - சுனாமி குடியிருப்பில், ஜூலை 1ம் தேதி கண்காணிப்பில் ஈடுபட்ட எண்ணுார் போலீசார், 105வது பிளாக் அருகே, விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2.50 லட்ச ரூபாய் மதிப்பிலான, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதில் தொடர்புடைய திருவொற்றியூர் - கன்னிக்கோயிலைச் சேர்ந்த சங்கீதா, 29, என்பவர் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், சங்கீதாவின் கணவர் சதீஷ், மாமியார் சந்தானலட்சுமி, கொழுந்தன் சந்தோஷ் ஆகியோரை தேடி வந்தனர். இதில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து, நேற்று காலை அப்பகுதியை போலீசார் சுற்றிவளைத்தனர். சதீஷ் , 30, சந்தோஷ், 29, ஆகியோரை கைது செய்தனர்; சந்தான லட்சுமியை தேடி வருகின்றனர்.
