ADDED : நவ 22, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், நவ. 22-
புழல் அருகே, புத்தகரம் விக்னேஸ்வரா நகரில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
கடந்த 17ம் தேதி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் சிலையில் அணிந்திருந்த 4 சவரன் தாலி பொட்டு மாயமானது.
புழல் போலீசார் விசாரித்து மதுரவாயலைச் சேர்ந்த கலைசெல்வன், 35, மடிப்பாக்கம் முருகன், 38, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.