/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேக் கிரீம் பூசியதால் தாக்குதல் ரவுடி உட்பட 2 பேர் கைது
/
கேக் கிரீம் பூசியதால் தாக்குதல் ரவுடி உட்பட 2 பேர் கைது
கேக் கிரீம் பூசியதால் தாக்குதல் ரவுடி உட்பட 2 பேர் கைது
கேக் கிரீம் பூசியதால் தாக்குதல் ரவுடி உட்பட 2 பேர் கைது
ADDED : நவ 09, 2025 04:08 AM
சென்னை:பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தில் கேக் கிரீம் பூசியதால், வாலிபர் மீது தாக்குதல் நடத்திய ரவுடி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம் என்.வி., நகரைச் சேர்ந்தவர் தேவா, 27. இவர், கடந்த 4ம் தேதி நள்ளிரவில், அதே பகுதியில் நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது, இவரின் நண்பரான ஆல்பர்ட், 32, என்பவர், பாரி அரசன், 23, என்பவர் மீது, கேக்கில் இருந்த கிரீமை எடுத்து பூசியுள்ளார். பதிலுக்கு பாரி அரசனும் இச்செயலில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்ட், தன் நண்பர்களான ரவுடி ராஜ், 25, உள்ளிட்ட நால்வருடன் சேர்ந்து, பாரி அரசனை தாக்கினர். இதனால், இவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். தனியார் மருத்துவமனையில் பாரி அரசன் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாரி அரசன் அளித்த புகார் மீது வழக்கு பதிந்த திருமங்கலம் போலீசார், சம்பவ இடத்தில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, திருமங்கலம் பாடி குப்பம் சுடுகாட்டில் பதுங்கியிருந்த ரவுடி ராஜ், ஆல்பர்ட் ஆகியோரை, நேற்று கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

