ADDED : மார் 14, 2024 12:20 AM
அ நிறம் | அளவு
வேப்பேரி, எம்.ஜி.ஆர்.நகர், புத்தா தெருவிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு போலீசார் சோதனை செய்து, மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச் செல்வி, 50, என்பவரை கைது செய்து அவரிடம் சிக்கியிருந்த இரு பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல், வில்லிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தி வந்த குமார், 42, என்பவரை போலீசார் கைது செய்து, இரு பெண்களை மீட்டனர்.
