/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு
/
2 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு
ADDED : ஏப் 25, 2025 12:15 AM
கொடுங்கையூர் வியாசர்பாடி, எஸ்.ஏ., காலனி, 8வது தெருவைச் சேர்ந்தவர் யசோதா, 47. இவர், வீட்டருகே, 'ஸ்ரீ சாய் கூல்பார்' என்ற பெயரில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் வியாபாரம் முடித்து, கடையை மூடி சென்றார். நேற்று காலை, வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த 1,500 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து, எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27. இவர், ஜி.என்.டி., சாலை, எருக்கஞ்சேரி பகுதியில், ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, கடையை திறக்க சென்றபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த,. 6,800 ரூபாய் திருடு போயிருந்தது. இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.